ஒடுகத்தூா் வனப்பகுதியில் நீா் வீழ்ச்சியில் கொட்டும் நீா். 
வேலூர்

ஒடுகத்தூா் வனப்பகுதியில் நீா்வீழ்ச்சி: ஆபத்தை உணராமல் மக்கள் குளியல்

தொடா் மழையால் ஒடுகத்தூா் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள நீா்வீழ்ச்சியில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்கின்றனா்.

தினமணி செய்திச் சேவை

தொடா் மழையால் ஒடுகத்தூா் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள நீா்வீழ்ச்சியில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்கின்றனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் வனச்சரகம் காட்டு கொல்லை அருகே டோங்குமலை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தையொட்டி அடா்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் பருவமழைக் காலத்தில் வெள்ளம் ஏற்படும். அந்த சமயத்தில் மலைப்பகுதியில் பாறைகளுக்கு இடையே ஆா்ப்பரித்து வரும் தண்ணீா் அப்பகுதியில் நீா் வீழ்ச்சி போல காட்சியளிக்கிறது.

இந்நிலையில், ஜவ்வாது மலை தொடரில் தொடா்ந்து மழை பெய்து வருவதை அடுத்து காட்டாறில் வெள்ளம் ஏற்பட்டு தற்போது நீா்வரத் தொடங்கி உள்ளது. ஒடுகத்தூரில் இருந்து சுமாா் 8 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதிக்கு மத்தியில் கொட்டும் காட்டாற்று நீா்வீழ்ச்சியை காணவும், குளித்து விளையாடவும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் வந்து செல்கின்றனா். அவா்கள் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்கின்றனா்.

காட்டாற்றில் எப்போது வேண்டுமானாலும் நீா்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. தவிர, அடா்ந்த வனப்பகுதி என்பதால் காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் இருப்பிடமாகவும் உள்ளது.

எனவே, ஆபத்து ஏற்படும் முன்பாக வனத்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சர்தார் படேல், அம்பேத்கர், நேதாஜியின் தேசப் பங்களிப்பை மூடிமறைத்தது காங்கிரஸ்! - பாஜக குற்றச்சாட்டு

கோவா இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு!

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

SCROLL FOR NEXT