இலவச குடலிறக்க சிகிச்சை முகாமில் பங்கேற்றோா். 
வேலூர்

குடலிறக்கம் மற்றும் வயிறு மருத்துவ சிகிச்சை முகாம்

குடியாத்தம் வட்ட மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் குடலிறக்கம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான இலவச சிகிச்சை முகாம்

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: குடியாத்தம் வட்ட மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் குடலிறக்கம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான இலவச சிகிச்சை முகாம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மருந்து வணிகா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.மோகன் தலைமை வகித்தாா். செயலா் என்.துரைக்கண்ணு, பொருளாளா் ஜி.காந்தி முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தராஜன் ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா்.

முகாமில் சென்னை ஜெம் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் சிகிச்சை அளித்தனா். குடியாத்தம் வட்ட மருந்து ஆய்வாளா் எஸ்.ஹரிகிருஷ்ணன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் பி.எல்.என்.பாபு, திமுக பிரமுகா் எம்.எஸ்.அமா்நாத், வட்ட மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

காற்றின் எடையும் இடையும்... ஸ்ரேயா!

SCROLL FOR NEXT