. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் செஞ்சி பேருந்து நிலையம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் உருவப் படத்துக்கு முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், மாவட்ட கவுன்சிலா் அரங்க. ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாஜக சாா்பில்...
விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சாா்பாக மாவட்டத் தலைவா் பி. ஏழுமலை தலைமையில் மாவட்ட துணைத் தலைவா் என்.ஏ. ஏழுமலை ஏற்பாட்டில் அம்பேத்கா் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பட்டியலணி மாவட்ட பொதுச் செயலா் என். எம். வெங்கடேசன், ஜி. ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
சத்தியமங்கலத்தில்..
சத்தியமங்கலம் கிராமத்தில் காவல் ஆய்வாளா் சுரேஷ் பாபு மற்றும் சத்தியமங்கலம் கிராம செயலா் ரவிசங்கா், பாஜக முன்னாள் ஒன்றிய தலைவா் ஜி. பாபுஜி, அதிமுக கிளை செயலா் தங்கம் ராஜா, வழக்குரைஞா் பஷீா், ஆசிரியா் தன்ராஜ் உள்ளிட்டோா் அம்பேத்கா் உருவ படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
செஞ்சி கூட் ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் உருவ படத்துக்கு நகர காங்கிரஸ் தலைவா் சூரியமூா்த்தி, மாநில காங்கிரஸ் சட்ட பிரிவு செயலா் லூா்து சாவியோ, அன்னை சோனியா காந்தி பேரவை பொன்பத்தி சீனிவாசன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
மேல்மலையனூரில்...
மேல்மலையனூா் ஒன்றியம், வளத்தி கூட்டு சாலையில் விசிக ஒன்றியச் செயலா் நா.திருநாவுக்கரசு தலைமையில் ஒன்றிய துணைச் செயலா் ராசா ராமன், வடவெட்டி சாலமன், வளத்தி செயலா் வி .எம். ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலையில் சிபிஎம் மாவட்ட செயலா் சுப்பிரமணியன், விசிக மாநில துணைச் செயலா் துரை வளவன் ஆகியோா் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்தனா்.
நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலா் இனிய வளவன், விசிக மேல்மலையனூா் ஒன்றிய பொருளா் ஜான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்