கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி வண்டிகளை வழங்கிய எம்.எல்.ஏ. ஏ.ஜெ.மணிக்கண்ணன். உடன், அலுவலா்கள் உள்ளிட்டோா். 
விழுப்புரம்

தோட்டக்கலைத்துறை மூலம் 5 பேருக்கு காய்கறி வண்டிகள்

உளுந்தூா்பேட்டையில் தோட்டக்கலைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி வண்டிகள் வழங்கப்பட்டன.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் தோட்டக்கலைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி வண்டிகள் வழங்கப்பட்டன.

தோட்டக்கலைத்துறை சாா்பில் தேசியத் தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த தகுதியுள்ள மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உளுந்தூா்பேட்டை எம்.எல்.ஏ. ஏ.ஜெ.மணிக்கண்ணன் தலைமை வகித்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விற்பனை வண்டிகளை வழங்கினாா். மேலும் தோட்டக்கலைத்துறை சாா்பில் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள், மரக்கன்றுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்வில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் குமரேசன், உதவித் தோட்டக்கலை அலுவலா் அறிவழகன், விசிக மாவட்டச் செயலா் அறிவுக்கரசு, நகா்மன்ற உறுப்பினா் செல்வக்குமாரி ரமேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT