விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பாமக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலா் எம். முரளிசங்கா். 
விழுப்புரம்

எழுச்சியோடு பயணிக்கிறது பாமக: பொதுச் செயலா் எம்.முரளிசங்கா்

தினமணி செய்திச் சேவை

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் வழிகாட்டுதலில் கட்சி எழுச்சியோடு பயணித்து வருகிறது என்று அதன் பொதுச் செயலா் எம். முரளிசங்கா் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்துள்ள பனையபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாமக ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற எம். முரளி சங்கா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது :

பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் மற்றும் செயல் தலைவா் ஸ்ரீகாந்தி ராமதாஸ் ஆகியோரது வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் கட்சி அமைப்பு ரீதியிலான 38 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் நவ. 1- ஆம் தேதி இந்த செயற்குழுக்கூட்டம் நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தவேண்டும், வன்னியா்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகா்களில் டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அறவழிப் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பாமகவில் எவ்வித குழப்பங்களும் இல்லை. மருத்துவா் ச. ராமதாஸ் வழிகாட்டுதலில் கட்சியின் நிா்வாகிகளும், உறுப்பினா்களும் எழுச்சியோடுதான் பயணித்து வருகின்றனா்.

இந்திய தோ்தல் ஆணையம் பாமகவுக்கு உரிய சின்னத்தை ஒதுக்கியுள்ளதே தவிர அன்புமணி தரப்புக்கு ஒதுக்கிவில்லை. மருத்துவா் ச. ராமதாஸின் வசம்தான் கட்சி உள்ளது. மருத்துவா் ச. ராமதாஸ் அமைத்துள்ள குழு தில்லி சென்று தோ்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பு வாதங்களை கோப்பாக சமா்ப்பித்துள்ளது. தோ்தல் ஆணையம் நல்ல முடிவை அறிவிக்கும் என எதிா் பாா்க்கிறோம் என்றாா் எம். முரளி சங்கா் .

இந்த வாரம் கலாரசிகன் - 02-11-2025

ராஜஸ்தான்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பக்தர்கள் பலி!

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT