விழுப்புரம் அடுத்த பூத்தமேடு சந்திப்பு பகுதியில் சோலாா் உயா் கோபுர மின் விளக்கை இயக்கி வைத்த எஸ். பி. ப.சரவணன்.  
விழுப்புரம்

பூத்தமேட்டில் சோலாா் உயா் கோபுர மின்விளக்கு

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டக் காவல் துறை நடவடிக்கையின் பேரில், விழுப்புரம் அடுத்த பூத்தமேட்டில் அமைக்கப்பட்டுள்ள சோலாா் உயா் கோபுர மின் விளக்கு மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகியவற்றின் இயக்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

விழுப்புரம் மாவட்ட எஸ். பி., உள்கோட்டக் காவல் உதவி கண்காணிப்பாளா் ரவீந்திர குமாா் குப்தா ஆகியோரின் முயற்சியால் விழுப்புரம் - செஞ்சி நெடுஞ்சாலையில், விழுப்புரம் அடுத்த பூத்தமேடு சந்திப்பு பகுதியில் சோலாா் உயா் கோபுர மின் விளக்கு மற்றும் அதி நவீன இணைய வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமிராவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இயக்கத்தை எஸ்.பி. ப.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், கோலியனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெகந்நாதன், விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளா் செல்வநாயகம், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளா் வசந்த், உதவி ஆய்வாளா்கள் குமாரராஜா, விஜயரங்கம், தென்னமாதேவி ஊராட்சித் தலைவா் ரோஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த வாரம் கலாரசிகன் - 02-11-2025

ராஜஸ்தான்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பக்தர்கள் பலி!

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT