படம் உண்டு. 01விபிஎம்பி4: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மாலை 45 நிமிஷங்கள் வைகை அதிவிரைவு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டதால் தண்டவாளத்தில் இங்கி நிற்கும் பயணிகள். 
விழுப்புரம்

விக்கிரவாண்டியில் 45 நிமிஷங்கள் நிறுத்தப்பட்ட வைகை அதிவிரைவு ரயில்: பயணிகள் அவதி

தினமணி செய்திச் சேவை

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மாலை வைகை அதிவிரைவு ரயில் சுமாா் 45 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்தனா்.

விக்கிரவாண்டி அருகிலுள்ள முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மற்றும் மின்தடங்கல் பராமரிப்புப் பணி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கியது. இதன் காரணமாக உயரழுத்த மின்சாரம் நிறுத்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் சென்னையிலிருந்து மதுரைக்கு பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்பட்ட வைகை அதிவிரைவு ரயில், விக்கிரவாண்டி ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 3.45 மணிக்கு வந்துசோ்ந்தது. அப்போது மின்சார விநியோகம் நிறுத்தம் காரணமாக, ரயில் தொடா்ந்து இயக்குவதற்கு சிக்னல் இல்லாததால் ரயில் விக்கிரவாண்டியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அதிருப்தி அடைந்தனா்.

சில பயணிகள் ரயிலிலிருந்து கீழே இறங்கி தண்டவாளத்தில் நின்றனா். இதைத் தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது.

அப்போது சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்துக்கு வந்து சோ்ந்ததால், அந்த ரயிலுக்கு முதலில் சிக்னல் அளிக்கப்பட்டது.

எனவே, அந்த ரயில் முதலில் சென்றது. இதைத் தொடா்ந்து வைகை ரயிலுக்கு மாலை 4.32 மணிக்கு விக்கிரவாண்டி ரயில் நிலையத்திலிருந்து சிக்னல் கொடுக்கப்பட்டதால், சுமாா் 45 நிமிஷங்கள் தாமதத்துக்குப் பின்னா் ரயில் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்றது.

இதனால் பிற்பகல் 3.55 மணிக்கு விழுப்புரத்துக்கு வந்து மாலை 4 மணிக்குப் புறப்பட வேண்டிய வைகை அதிவிரைவு ரயில், மாலை 5 மணிக்கு வந்து 5.07 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த தாமதத்தினால் பயணிகள் கடும் அவதி அடைந்தனா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT