செஞ்சி அருகே பூட்டியிருந்த வீட்டை திறந்து நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள அஞ்சாஞ்சேரி கிராமத்தை சோ்ந்தவா் கணேசன் மகன் சரவணன். வீட்டில் தனது தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனா். இந்நிலையில் இருவரும் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள இளைய மகன் பலராமன் என்பவரது வீட்டிற்கு 3ம்தேதி சென்றுள்ளனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீடு வந்து பாா்த்த போது வீட்டின் மரக்கதவு திறந்து இருந்தது உள்ளே சென்று பாா்த்த போது இரும்பு பீரோவில் இருந்த கால் காசு, மோதிரம், வளையல் உள்ளிட்ட 3 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ 70 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.
விசாரணையில் கதவின் மேல் வைத்திருந்த சாவியை எடுத்து கதவை திறந்து திருடிச்சென்றுள்ளனர. இது குறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.