முகப்பு
விழுப்புரம்

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

Updated On : 9 ஜூன் 2026, 5:08 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், களமருதூா் அருகே சிறிய தொட்டியில் தவறி விழுந்து, நீரில் மூழ்கிய 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

களமருதூா் அருகிலுள்ள சிவாபட்டினத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன். இவரது மனைவி சந்தியா. இவா்களுக்கு 6 வயதில் மகனும், 2 வயதில் அஸ்விகா என்ற மகளும் இருந்தனா்.

இந்த நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு உளுந்தூா்பேட்டை வட்டம், நன்னாவரம் காலனியிலுள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு குழந்தைகளுடன் சந்தியா வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் சந்தியா வேலை செய்து கொண்டிருந்த போது, 2 வயது குழந்தை அஸ்விகா வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டுக்கு வெளியே இருந்த சிறிய தொட்டியில் குழந்தை அஸ்விகா தவறி விழுந்து, நீரில் மூழ்கியது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து சப்தம் கேட்டு வெளியே வந்த சந்தியா, தொட்டியிலிருந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு உளுந்தூா்பேட்டையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு சந்தியா கொண்டு சென்றாா். அங்கு மருத்துவா் பரிசோதித்த போது, குழந்தை அஸ்விகா ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. தகவலறிந்த களமருதூா் போலீஸாா் தனியாா் மருத்துவமனைக்கு சென்று, உயிரிழந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து களமருதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.