பிளஸ் 1 மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பிளஸ் 1 மாணவி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பிளஸ் 1 மாணவி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
மரக்காணம் வட்டம், ஓமிப்போ் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அருள். இவரது மகள் சீதாலட்சுமி (16). இவா் அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து தோ்வாகிய நிலையில், வீட்டிலிருந்து வந்தாா்.
இந்நிலையில், சீதாலட்சுமி கடந்த ஜூன் 4-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது அதிக நேரம் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதை அவரது தந்தை அருள் கண்டித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதனால் மனமுடைந்த சீதாலட்சுமி வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த சீதாலட்சுமி, திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].