கடலூர்

கூட்டுறவு மேலாண்மைப் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

DIN

கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கடலூர் மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூட்டுறவு வங்கி, சங்கங்களில் வேலைவாய்ப்புக்கு முக்கியத் தகுதியான கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி கடலூரில் உள்ள எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேர்வதற்கு குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 9 மாதம் நடைபெறும் பயிற்சியின் முடிவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யக்கூடிய பட்டயச் சான்றிதழ், எம்.எஸ்.ஆபிஸ் கணினி பயிற்சி சான்றிதழ், நகை மதிப்பீடு சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.
பயிற்சிக் கட்டணம்: இதற்கு பயிற்சிக் கட்டணமாக ரூ. 13,800 வழங்க வேண்டும்.
இந்தப் பயிற்சிக்கான விண்ணப்பப் படிவத்தை பயிற்சி நிலையத்தில் ரூ. 100 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட படிவத்தை ஜூலை 12-ஆம் தேதிக்குள் கடலூர் கடற்கரை சாலையில் அமைந்துள்ள மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வகுப்புகள் ஜூலை 14-ஆம் தேதி முதல் தொடங்கும். மேலும் விபரங்களுக்கு 04142 - 222619 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT