கடலூர்

திருவதிகையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை (ஜூன் 8) கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

DIN

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை (ஜூன் 8) கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.  அதன்படி, வைகாசி மாத பௌர்ணமியையொட்டி, மாலை 6 மணி முதல் பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வரலாம்.
மேலும், இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவமும், இரவு 11 மணிமுதல் 12 மணி வரை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT