மதுக் கடையை அகற்றக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்தக் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் கடலூர் கம்மியம்பேட்டை பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி அந்தக் கட்சியினர் மனு அளித்தனர். மேலும், திட்டகுடி வட்டம் - கோழியூர் ஆயிகுளத்தில் வண்டல் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு தாழ்த்தபட்ட மக்கள் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். நிகழ்வின் போது, கடலூர் தெற்கு மாவட்டச் செயலர் பால.அறவாழி, திட்டகுடி தொகுதி செயலர் அலெக்சாண்டர், நிர்வாகி உதயன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.