கடலூர்

மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாட்டு வண்டித் தொழிலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாட்டு வண்டித் தொழிலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாடு உள்ளிட்ட கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பன்முகத் தன்மைக் கொண்ட இந்தியாவில் ஒற்றைக் கலாசாரத்தைத் திணிக்கக் கூடாது. உணவு, உடை, உறைவிடம் இதனைத் தேர்வு செய்வது தனி மனிதரின் உரிமை. இதில் அரசு தலையிடக் கூடாது. மாட்டு இறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) சார்பில், கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகே புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.வி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வி.திருமுருகன் முன்னிலை வகித்தனர். சிஐடியூவின் மாவட்டச் செயலர் பி.கருப்பையன், மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன், துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சிஐடியூ ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலர் ஏ.பாபு, மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கத்தின் ஏ.முருகன், கே.ரத்னம், துரை, எம்.முருகன், கே.பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT