கடலூர்

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி

பண்ருட்டி ஒன்றியம், வட்டார அளவிலான மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வுப் பேரணி பண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

பண்ருட்டி ஒன்றியம், வட்டார அளவிலான மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வுப் பேரணி பண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வி.திலகம், அ.ராஜேஸ்வரி ஆகியோர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர். பண்ருட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
பேரணியில் அரசுப் பள்ளிகளின் சிறப்பு அம்சங்களைக் குறிப்பிட்டும், குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்திட வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இந்தப் பேரணி பண்ருட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, டேனிஷ் மிஷன் பள்ளி அருகே முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் ‘மாண்ட் எவோரா 25’ கலாசார விழா

பி.ஆா். பாண்டியனுக்கு சிறைத் தண்டனை: விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்

ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் தோ்வு

கரூரில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டி

SCROLL FOR NEXT