கடலூர்

உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்ட முரண்பாடுகளைக் களையக் கோரிக்கை

உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷிடம்

தினமணி

உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைப்பின் மாநில இணைச் செயலர் திட்டக்குடி தங்கராசு கோரிக்கை மனு அளித்தார்.
 அந்த மனுவில் கூறியிருப்பதாவது: உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகளை அழைத்தமைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.
 உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் நகல் ஆங்கிலத்தில் உள்ளதால், சாமானிய வணிகர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அதனை எளிய தமிழில் வெளியிட வேண்டும்.
 சந்தை என்ற பெயரில் தரமற்ற பொருள்களை வரி செலுத்தாமல் சில்லறை வியாபாரத்தில் விற்பதால், சட்டப்படி வரி செலுத்தி, அரசின் விதிகளுக்கு உள்பட்டு செயல்படும் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தரமற்ற பொருள்கள் விற்பதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை மாற்றி, ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும் என அரசு அறிவித்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
 மேலும், உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

SCROLL FOR NEXT