கடலூர்

பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திட்டக்குடி வட்டம், வாகையூர் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி

திட்டக்குடி வட்டம், வாகையூர் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கோயிலைப் புதுப்பிக்கும் பணி அண்மையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வந்தனர்.
 அதன்படி, ஜூன் 13-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கும்பாபிஷேகத்துக்கான வாஸ்து சாந்தி புஜைகளுடன் முதலாம் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை (ஜூன் 14) காலை இரண்டாம் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
 இதனைத் தொடர்ந்து, பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாவில் வாகையூர், அதன் சுற்றுவட்டப் பகுதிகளைச் சேரந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT