உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை ரத்த தானம் செய்தனர்.
என்எல்சி மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை டிஐஜி பிரதீபா அகர்வால், முதன்மை கமாண்டர் கஞ்சன்குமார் சின்ஹா ஆகியோர், சமூக சிந்தனையோடு உயிர் காக்கும் செயலான ரத்த தானத்தை ஊக்குவிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், படை வீரர்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதன் பேரில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை ஆய்வாளர் ராம்சுதார் தலைமையில், பாதுகாப்புப் படை வீரர்கள் என்எல்சி பொது மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.