தமிழகத்தில் பல்வேறு துறைகளில் மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, கடலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமை அஞ்சலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டச் செயலர் பால்கி தலைமை வகித்தார். மாவட்ட பொருளர் கோவி.பால.முருகு தொடக்கவுரை ஆற்றினார். விக்டர் ஜெயசீலன், வைத்திலிங்கம், குழந்தைவேலு, ஜெயராமன், குமரவேல், தில்லையாடிராஜா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழரின் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழ்வாராய்ச்சியில் மத்திய அரசு தலையிட்டு குளறுபடி செய்வதை கண்டிப்பதாகக் கூறியும் முழக்கமிட்டனர். மேலும், நீட் தேர்வையும் கண்டித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் அறிவியல் இயக்கம், வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் திரளானோர் கலந்து கொண்டனர். ஆசைத்தம்பி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.