கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 தாற்காலி மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் மேல்நிலைத் தேர்வு (பிளஸ் 2) முடிவுகள் கடந்த 12-ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து, கடலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. பல்வேறு உயர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தற்காலி மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படுவதால் மாணவர்கள் இந்த மதிப்பெண் சான்றிதழை பெற்றுச் சென்றனர்.
நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரையில் இந்த தாற்காலிகச் சான்றிதழை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல, தனித் தேர்வர்கள் அந்தந்த தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 31,333 பேர் எழுதினர். அதில், 16,788 பேர் மாணவிகள், 14,545 பேர் மாணவர்களாவர். இதில் மொத்தம் 26,589 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 14,931 பேரும், மாணவர்கள் 11,658 பேரும் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.