கடலூர்

மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவி

பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.26.70 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி

பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.26.70 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 பேர்பெரியான்குப்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா தலைமை வகித்தார்.
 பண்ருட்டி வட்டாட்சியர் விஜய்ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.வசந்தா, ஜி.ஜெயக்குமாரி, வருவாய் ஆய்வாளர் கே.ராஜலிங்கம் முன்னிலை வகித்தனர்.
 நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன் பங்கேற்று ரூ.26.70 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
 முன்னதாக அவர் பேசியதாவது: ஏரி,
 குளம், குட்டைகளில் தண்ணீர் இல்லை. திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் சொந்த செலவில் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி ஏரி, குளங்களை தூர்வார உள்ளோம்.
 என்எல்சி நிறுவனம் சார்பில் சொரத்தூர் ஏரி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. பேர்பெரியான்குப்பம் ஏரி தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கும். ஏரி, குளங்களை தூர்வார பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
 நிகழாண்டில் 15 சதவீதம் அதிகம் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மழை மூலம் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க ஏரி, குளங்களை தூர்வாரி வைக்க வேண்டும். அனைத்தும் அரசு செய்யும் என்ற நோக்கில் இருக்கக்கூடாது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சக்கூடாது என்றார்.
 முகாமில், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

SCROLL FOR NEXT