கடலூர்

மார்க்சிஸ்ட் பிரசாரக் கூட்டம்

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காட்டுமன்னார்கோயிலில் பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காட்டுமன்னார்கோயிலில் பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் மூசா, வட்டச் செயலர் பிரகாஷ், வட்டக் குழு மகாலிங்கம், மாவட்டக் குழு தேன்மொழி, நகரச் செயலர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
 பிரசாரக் கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தல், பேரூராட்சிப் பகுதிகளில் தேசிய ஊரக வேலைஉறுதி அளிப்புத் திட்டத்தை விரிவுபடுத்தி, 200 நாள்கள் வேலையும், ரூ. 400 கூலி வழங்க வலியுறுத்தல், பேரூராட்சி, கிராமப்புறங்களில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டைப் போக்க வலியுறுத்தல், வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT