கடலூர்

இரு குழந்தைகளுடன் மகள் மாயம்: தந்தை போலீஸில் புகார்

நெய்வேலி அருகே இரு பெண் குழந்தைகளுடன் மாயமான மகளைக் கண்டு பிடித்துத் தருமாறு தந்தை போலீஸில் புகார் அளித்தார்.

தினமணி

நெய்வேலி அருகே இரு பெண் குழந்தைகளுடன் மாயமான மகளைக் கண்டு பிடித்துத் தருமாறு தந்தை போலீஸில் புகார் அளித்தார்.
 கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்துள்ள மந்தாரக்குப்பம், ஐடிஐ நகரைச் சேர்ந்தவர் சுந்தரபாஸ்கர் (48). இவரது மகள் நர்மதா நாச்சியார் (27). இவருக்கும், விருத்தாசலம் வட்டம், பெரியாக்குறிச்சி, ஜிபி நகரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 தம்பதிக்கு வினோதா நாச்சியார் (7), கனிதா நாச்சியார் (3) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அரசு மதுக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றிய வினோத்குமார், தற்போது மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்துள்ளார்.
 இந்த நிலையில், கோடை விடுமுறைக்காக நர்மதா நாச்சியார், தனது குழந்தைகளுடன் மந்தாரக்குப்பத்தில் உள்ள தந்தை வீட்டுக்குச் சென்றிருந்தாராம். மே 14-ஆம் தேதி விருத்தாசலத்தில் உள்ள அழகு நிலையத்துக்குப் பயிற்சிக்கு செல்வதாகக் கூறி இரு குழந்தைகளுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
 இதுகுறித்து அவரது தந்தை சுந்தரபாஸ்கர் அளித்த புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண் வளத்தை காத்தால்தான் விவசாயம் செய்ய முடியும்!

சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி

விவசாயி வீட்டில் 4.5 பவுன் திருட்டு

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கானிப்பு கேமரா

காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT