கடலூர்

திருவதிகை பெருமாள் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு

திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (மே 25) சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதனையொட்டி, சரநாராயண பெருமாள், யோக நாராயணனாக காட்சி அளிக்கிறார்.

தினமணி

திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (மே 25) சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதனையொட்டி, சரநாராயண பெருமாள், யோக நாராயணனாக காட்சி அளிக்கிறார்.
 பண்ருட்டி, திருவதிகையில் புகழ் பெற்ற ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
 அதன்படி, வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி, மூலவர் சரநாராயண பெருமாள், ஸ்ரீ யோக நாராயணனாக காட்சி அளிக்கிறார். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கண்ணாடி அறையில் உற்சவர் உபய நாச்சியார்களுடன் வசந்தோத்ஸவம் நடைபெறுகிறது.
 காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், 7.30 மணிக்கு நித்யபடி, 9 மணிக்கு உற்சவர் உள் புறப்பாடு, 12.30 மணிக்கு உச்சி காலம், மாலை 4 மணிக்கு நடை திறப்பு, 6 மணிக்கு நித்யபடி, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருப்பங்கள் கைகூடும் மீன ராசிக்கு: தினப்பலன்கள்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இண்டி கூட்டணி தீவிரம்!

ரயில்வே அலுவலா் வீட்டில் ரூ. 3.50 லட்சம், வெள்ளி திருட்டு

‘ஆபரேஷன் கிளீன் ஸ்வீப்’: துவாரகாவில் 130 சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தல்

தமிழக எஸ்ஐஆா்: 4 சிறப்பு பாா்வையாளா்கள் நியமனம்

SCROLL FOR NEXT