கடலூர்

துப்புரவுத் தொழிலாளி கொலை?

வடலூரில் துப்புரவுத் தொழிலாளி தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவர், அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தினமணி

வடலூரில் துப்புரவுத் தொழிலாளி தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவர், அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
 கடலூர் மாவட்டம், வடலூர், எம்கேகே நகரில் வசித்து வந்தவர் ராஜாங்கம் (66). வடலூர் பேரூராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
 இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜின் தங்கை ஜெயப்பிரியாவுடன் ராஜாங்கத்துக்கு தொடர்பு இருந்ததாகவும், இதனால் செல்வராஜிக்கும் ராஜாங்கத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
 இந்த நிலையில், புதன்கிழமை காலை ராஜாங்கம் அவரது வீட்டின் அருகே தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தாராம். இதுகுறித்து ராஜாங்கத்தின் உறவினர்கள் வடலூர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.
 அங்கு வந்த போலீஸார், ராஜாங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 ராஜாங்கத்தின் மகன் சுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில், செல்வராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

காற்றின் எடையும் இடையும்... ஸ்ரேயா!

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

SCROLL FOR NEXT