சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில், கண் தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி அருகிலிருந்து பேரணியை மாவட்ட முன்னாள் அரிமா சங்க ஆளுநர் ஆர்.எம்.சுவேதகுமார் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். அரிமா சங்கத் தலைவர் ஏ.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆர்.ரவிசங்கர் முன்னிலை வகித்தார். செயலாளர் டி.என்.ஆர்.அரவிந்தன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் அறிவுராஜா, வட்டாரத் தலைவர் ஏ.ஆர்.மனோகரன், மாவட்டத் தலைவர் ஏ.சி.பி.ரத்தினசுப்பிரமணியன், சேத்தியாத்தோப்பு சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் பாண்டியன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியர் முத்துக்குமரன் தொகுத்து வழங்கினார். பேரணி, முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வுப் பதாகைகள், முழக்கங்களுடன் வலம் வந்து மீண்டும் பள்ளியை அடைந்தது.
பேரணியை மாவட்டத் தலைவர் பெரி.முருகப்பன் வழி நடத்தினார்.
காட்டுமன்னார்கோவிலில்...
காட்டுமன்னார்கோவிலில் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற கண் தான விழிப்புணர்வுப் பேரணிக்கு அரிமா சங்கத் தலைவர், கண் மருத்துவர் கே.எம் இளையராஜா தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் டி.அறிவுராஜா, வட்டாரத் தலைவர் ஏ.ஆர் மனோகரன், மாவட்டத் தலைவர் பெரி.முருகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியை காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் ஜெயந்தி தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரிமா மாவட்டத் தலைவர்கள் ஜி.சின்னமணி, ஜி.துரைசாமி. எம்.கோதண்டபாணி, ஜி.கே.
அருண், எம்.பரணிதரன், பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் என்.தர்மராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரணியில், பருவதராஜ குருகுல மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காட்டுமன்னார்கோயிலின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கண்தானம் பற்றி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடி, துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.