கடலூரில் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தையை சென்னை பரங்கிமலை ஹோலி அப்போஸ்தலோ கான்வென்ட் நிர்வாகத்திடம் புதன்கிழமை தத்துக் கொடுக்கப்பட்டது.
கடலூரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 14 வயதுச் சிறுமிக்கு அண்மையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தையை சிறுமியால் வளர்க்க முடியாது என்பதால், அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்தக் குழந்தையை அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனமான சென்னை பரங்கிமலை ஹோலி அப்போஸ்தலோ கான்வென்ட் நிர்வாகிகளிடம், கடலூர் மாவட்டக் குழந்தைகள் நலக் குழுத் தவைலர் ஜெயந்தி ரவிச்சந்திரன் புதன்கிழமை தத்துக் கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட சமுக நல அலுவலர் இந்திரா, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பாலு, மாவட்ட நன்னடத்தை அலுவலர் பிரபு, தொட்டில் குழந்தைத் திட்ட பணியாளர் புவனேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைக்கு பிரேமா என பெயர் சூட்டப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.