கடலூர், வன்னியர்பாளையம் நகராட்சித் தொடக்கப் பள்ளியில் அகத்தியர் விழிப்புணர்வு மையம் சார்பில், வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அகத்தியர் மைய நிர்வாக இயக்குநர் மகேந்திரவர்மன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் டோம்னிக் மைக்கேல் விக்டர் வரவேற்றார். அக்னி சிறகுகள் பிரவீன் காந்தி, தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜமச்சேந்திர சோழன், உலகத் திருக்குறள் பேரவையின் மாவட்டத் தலைவர் பாஸ்கரன், உலகத் திருவள்ளுவர் பொதுநலப் பேரவையின் தலைவர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர் மாவட்டத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் திருமார்பன் வ.உ.சி சிதம்பரனார் உருவப் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.
தமிழ்ச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குழந்தைவேலனார் சிறப்புரையாற்றினார். மகிழ்ச்சியின் வழி தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் வைத்தியநாதன், சதீஷ், தினேஷ், சாந்தகுமாரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. வழக்குரைஞர் வேல்முருகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.