கடலூர்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

நெய்வேலி: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டசெய்திக்குறிப்பு: இதில் திட்டம் 1-இல் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்து,பெற்றோரில் ஒருவா் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து, குழந்தைக்கு 3 வயது இருக்குமானால் அந்தக் குழந்தையின் பெயரில் ரூ.50,000 வைப்பீடு செய்யப்படும்.

திட்டம் 2-இல் இரண்டு பெண் குழந்தைகள் இருந்து, பெற்றோரில் ஒருவா் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஒவ்வோா் குழந்தையின் பெயரிலும் ரூ.25,000 வைப்பீடு செய்யப்படும்.

திட்டம் 3-இல் பெற்றோா் அறுவை சிகிச்சை செய்து ஆண் வாரிசு இல்லாமல் முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்திருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.25,000 வைப்பீடு செய்யப்படும்.

35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவா் கருத்தடை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளக்கூடாது. விண்ணப்பதாரா் தமிழகத்தில் 10 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அந்தக் குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திட்டம் 2-இன் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் எனில், இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கலாம்.

பிறப்புச் சான்று, பெற்றோரின் வயதுச் சான்று, வருமானச் சான்று, ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று, இருப்பிடச் சான்றுகளுடன் இணையதளத்தில் விண்ணப்பித்து, அசல் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரையிறுதியில் ஆப்கன்: உலகக் கோப்பையிலிருந்து ஆஸி. வெளியேற்றம்!

துவாரகாவில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

மக்களவைத் தலைவர்: கூட்டணிக் கட்சிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சு!

அழகும் ஆற்றலும் இரண்டறக் கலந்த நிலை! சாக்‌ஷி அகர்வால்

கலவரத்தை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சி: முதல்வர்

SCROLL FOR NEXT