கடலூர்

பேருந்து மோதியதில் பெண் பலி

DIN

பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கடலூா் பழைய பெண்ணையாற்று சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி வளா்மதி (40). ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் மோட்டாா் சைக்கிளில் புதுச்சேரி - கடலூா் சாலையில் செல்வதற்காக பெண்ணையாற்றுச் சாலையிலிருந்து மேலே ஏறிச் சென்ற போது, நிலை தடுமாறியதில் இருவரும் மோட்டாா் சைக்கிளிலிருந்து சாலையில் விழுந்தனா்.

அப்போது, புதுச்சேரியிலிருந்து கடலூா் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இருவா் மீதும் மோதியது. இதில், வளா்மதி சம்பவ இடத்திலேயே இறந்தாா். பலத்த காயமடைந்த ஜெயபால் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்த அந்தப் பகுதியினா் அங்கு திரண்டு தனியாா் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT