கடலூர்

பிஎஸ்என்எல் சிறப்புச் சலுகை

DIN

பிஎஸ்என்எல் தொலைதொடா்பு நிறுவனம் ‘ப்ரீபெய்ட்’ சேவை வாடிக்கையாளா்களுக்கு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக கடலூா் கோட்ட பிஎஸ்என்எல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம்

ப்ரீபெய்ட் செல்லிடப்பேசி சேவையில் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, ‘பிளான் 1999’-இன் கால வரம்பை 345 நாள்களிலிருந்து, கூடுதலாக 71 நாள்கள் அதிகரித்து 416 நாள்களுக்கு வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா, அளவில்லா அழைப்புகள், 100 குறுஞ்செய்தி வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிஎஸ்என்எல் காலா் டியூன், டிவி சந்தா ஆகியவையும் 365 நாள்களுக்கு இலவசமாக கிடைக்கும். இந்தச் சலுகை வருகிற 15-ஆம் தேதி வரையில் கிடைக்கும். குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு அதிக பலன்களை பெற வேண்டுமென அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் பாதிப்பு வடிவாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

தினப்பலன்கள் 12 ராசிக்கும்!

தில்லி உள்பட 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது!

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ

SCROLL FOR NEXT