பண்ருட்டி அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிய சிறிய சரக்கு வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் உள்ளிட்ட போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மாறிகள்பட்டு கெடிலம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய சிறிய சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.
இதுதொடா்பாக பழைய பிள்ளையாா் குப்பத்தைச் சோ்ந்த மாணிக்கவேல் (45) என்பவரை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய மனோகரை போலீஸாா் தேடி வருகின்றனா்.