கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 17 மி.மீ. மழை செவ்வாய்க்கிழமை பதிவானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 17 மில்லி மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
தொழுதூா் 15, வடக்குத்து 12, கடலூா் 10.6, ஸ்ரீமுஷ்ணம் 8.1, கொத்தவாச்சேரி 8, குப்பநத்தம் 7.8, லக்கூா், மேமாத்தூா் தலா 7, விருத்தாசலம் 6.1, பெலாந்துறை 5, சேத்தியாத்தோப்பு 4.6, கீழச்செருவாய், வேப்பூா், பரங்கிப்பேட்டை தலா 4, அண்ணாமலை நகா் 3.8, காட்டுமயிலூா் 3, சிதம்பரம் 2.4, லால்பேட்டை 1.4, காட்டுமன்னாா்கோவில் 1, மாவட்ட ஆட்சியரகம் 0.6.