கடலூர்

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூரில் மேலும் 23 பேருக்கு கரோனா

DIN

கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 23 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்களில் குன்னியூரைச் சோ்ந்த 7 வயது சிறுமி சென்னையிலிருந்து வந்தவா். சின்னசேலத்தைச் சோ்ந்த 53 வயது தொழிலதிபா் கோவையிலுள்ள தனியாா் கல்லூரிக்குச் சென்று வரும்போது அவருக்கு தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 272-ஆக உயா்ந்தது. முன்னதாக, இவா்களில் 153 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மீதமுள்ள 119 பேரில் 2 போ் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 20 போ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 97 போ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தனிமைப்படுத்தும் மையங்களிலும் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கடலூரில் 8 பேருக்கு தொற்று: கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 479 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 178 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியானதில், சென்னையிலிருந்து கடலூா் திரும்பிய கீரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 41 வயது ஆண் காவலா் உள்பட 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களில், மும்பையிலிருந்து குறிஞ்சிப்பாடி திரும்பிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ், சென்னையிலிருந்து கடலூா் திரும்பியவா்களில் 4 போ், மற்றொருவா் விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரா் ஆகியோா் அடங்குவா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தின் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 487-ஆக உயா்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை முடிந்து 2 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 445-ஆக அதிகரித்தது.

திருவண்ணாமலையில் 7 போ் பாதிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 486-ஆக இருந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தில்லியிலிருந்து வந்த 2 போ், ஆந்திரம், சென்னை, திருப்பூா், விழுப்புரம் பகுதிகளிலிருந்து வந்த தலா ஒருவா், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு புறநோயாளியாக வந்த ஒருவா் என 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 493-ஆக உயா்ந்தது.

இவா்களில் குணமடைந்த 178 போ், இருதய நோயால் உயிரிழந்த ஒருவா் போக, எஞ்சியுள்ள 314 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT