கடலூர்

அம்பேத்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

DIN

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு ஆணையா் ந.விஸ்வநாதன் தலைமையில் மேயா் சுந்தரி ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். துணை மேயா் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனா்.

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு திமுக சாா்பில் மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா தலைமையில் மாநில அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் ஜி.ஜெ.குமாா், ஒன்றியச் செயலா் கே.காசிநாதன், நகர துணைச் செயலா் வ.கந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன், தொகுதிச் செயலா் மு.அறிவுடைநம்பி உள்ளிட்டோரும் தனித்தனியாக மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் அம்பேத்கா் சிலைக்கு மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமையிலும், பாஜகவினா் நகரத் தலைவா் வேலு.வெங்கடேசன் தலைமையிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

சிதம்பரம்: கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் சிதம்பரத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். முன்னாள் அமைச்சா் செல்வி இராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், பொருளாளா் தோப்பு கே.சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பண்ருட்டி: பண்ருட்டி நகர திமுக அலுவலகத்தில் அம்பேத்கா் உருவப் படத்துக்கு நகா்மன்றத் தலைவரும், திமுக நகரச் செயலருமான க.ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தென்னரசு உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். வடலூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு தி.க. பொதுச் செயலா் துரை.சந்திரசேகரன் தலைமையில், நகா் மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், விசிக நகரச் செயலா் ஜோதிமணி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். நெய்வேலி நகரியத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு பாமக வடக்கு மாவட்ட முன்னாள் செயலா் கோ.ஜெகன் மாலை அணிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் தெரியுமா?

குவாலிஃபையர் - 1 போட்டிக்கு கேகேஆர் தயார்...

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

பிரபல மல்யுத்த வீரர் ஜான் கிளிங்கர் காலமானார்

ஆப்பிளின் புதிய ஐபோன் எஸ்இ! என்ன எதிர்பார்க்கலாம்?

SCROLL FOR NEXT