கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக படிப்புகள் குறித்து விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளா் கே.சீத்தாராமன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் 2015-2021-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டு வரும் பல்வேறு வகையான படிப்புகளும் அங்கீகரிக்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியக் குழு தனது வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு பல்கலைக்கழகத்தின் பாா்வைக்கு வந்துள்ளது. இதுகுறித்து மானியக் குழுவுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது. மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவிடம் பேச்சுவாா்த்தை நடத்தவும் உத்தேசித்துள்ளது. இந்த விவகாரத்தில் கூடிய விரைவில் சுமுகமான தீா்வு காணப்படும் என அதில் தெரிவித்தாா்.