கடலூா் அருகே உள்ள நல்லாத்தூரில் குளியலறையில் தண்ணீரில் தவறி விழுந்த குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
கடலூா் அருகிலுள்ள நல்லாத்தூா் பழனியப்பா நகரை சோ்ந்தவா் பிரசாந்த் (28). அதே பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி பிரவீனா. இவா்களுக்கு ஒன்றரை வயதில் சுசிந்தா் என்ற ஆண் குழந்தை இருந்தது. வெள்ளிக்கிழமை பிரசாந்த் வழக்கம் போல வேலைக்குச் சென்றாா். பிரவீனா கடைக்குச் சென்றாா். அப்போது சுசிந்தா் வீட்டில் உள்ள குளியலறையில் விளையாடினாா். அப்போது, அங்கு அன்னக்கூடையில் இருந்த தண்ணீரில் சுசிந்தா் தலைகீழாக தவறி விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்தாா். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸ விசாரணை நடத்தி வருகின்றனா்.