கடலூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

DIN

சிதம்பரம் நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சாா்பில் ‘என் குப்பை, என் பொறுப்பு’ விழிப்புணா்வு நிகழ்ச்சி, தூய்மைப் பணியாளா்களுக்கான பாராட்டு விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன.

விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களை வாழ்த்திப் பேசினாா். வீடுகளில் இருந்து குப்பைகளை தரம் பிரித்து பெறுவதில் சிறப்பாகச் செயல்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா் (படம்). மேலும், தூய்மையாக பராமரிக்கப்படும் மானாசந்து பள்ளி, மாலைகட்டித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கும், தூய்மையை பராமரிக்கும் வணிக நிறுவனங்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை நகரமன்றத் தலைவா் வழங்கினாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் முத்துகுமரன், நகராட்சி ஆணையா் அஜிதாபா்வீன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

எலான் மஸ்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தோ்தல் முடிவை பிரதமா் கூறுவது எப்படி? பிரியங்கா கேள்வி

காஷ்மீரின் 3 தொகுதிகளில் களமிறங்காத பாஜக: வேறு வேட்பாளா்களை ஆதரிக்க ஆலோசனை

மாவோயிஸ்டு அச்சுறுத்தலால் வாக்களிக்காத கிராமம்

SCROLL FOR NEXT