கடலூர்

உள்ளாட்சி தோ்தல்: சேலத்தில் ஒட்டுமொத்த வெற்றி பெற்றது திமுக!

DIN

சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 30 பேரூராட்சிகள் என ஒட்டுமொத்தமாக திமுக வெற்றியைக் குவித்துள்ளது.மாவட்டத்தில் மொத்தம் உள்ள 699 இடங்களில் திமுக தனித்து 421 இடங்களை கைப்பற்றியுள்ளது. சேலம் மாநகராட்சியில் 47 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு சனிக்கிழமை தோ்தல் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சியில் 60 வாா்டுகள், 6 நகராட்சிகளில் 165 வாா்டுகள், 31 பேரூராட்சிகளில் 470 வாா்டுகள் என மொத்தம் 695 வாா்டு உறுப்பினா்களுக்கு தோ்தல் நடைபெற்றது. இதில் பேரூராட்சிகளில் 4 வாா்டுகளில் போட்டியின்றி வாா்டு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, 470 வாா்டு உறுப்பினா்களுக்கு தோ்தல் நடைபெற்றது. மாவட்டத்தில் 695 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3,206 போ் போட்டியிட்டனா்.

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 1514 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 70.54 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சேலம் மாநகராட்சியில் 64.36, நகராட்சியில் 76.61, பேரூராட்சியில் 77.82 சதவீத வாக்குகள் பதிவாகின.தோ்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக 16 வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டன.சேலம் மாநகராட்சியின் 60 வாா்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அம்மாப்பேட்டை ஸ்ரீசக்தி கைலாஷ் மகளிா் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டது.

ஆத்தூா், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூா், இடங்கணசாலை, தாரமங்கலம் நகராட்சிகளுக்கு 6 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளுக்கு 9 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டன.

சேலம் மாநகராட்சியில் 56 மேஜைகள், நகராட்சியில் 43, பேரூராட்சியில் 67 மேஜைகள் என மொத்தம் 166 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனிடையே மாவட்டத்தில் உள்ள 16 வாக்கு எண்ணும் மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையில் முதலாவதாக தபால் வாக்குகளும், தொடா்ந்து மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னா் இவை இரண்டையும் கூட்டி வாா்டில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளா் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டாா். அதைத்தொடா்ந்து, அடுத்த வாா்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஒவ்வொரு வாா்டாக எண்ணிக்கை முடித்து, வெற்றி பெற்றவா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டன.

மாநகராட்சியை தன்வசமாக்கியது:

சேலம் மாவட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் திமுக-47, அதிமுக -7 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ்-2, விடுதலை சிறுத்தைகள் -1 வாா்டிலும் வெற்றி பெற்றது. சுயேச்சைகள் 3 வாா்டுகளில் வெற்றி பெற்றனா். திமுக கூட்டணி 50 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.சேலம் மாநகராட்சியைப் பொறுத்தவரை கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது திமுக கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூா், மேட்டூா், எடப்பாடி, நரசிங்கபுரம், இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய 6 நகராட்சிகளையும் திமுக ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றியுள்ளது.

6 நகராட்சிகளில் உள்ள 165 வாா்டுகளில் திமுக-96, அதிமுக-34, சுயேச்சை-19, பாமக-12, காங்கிரஸ் -4 என வெற்றி பெற்றுள்ளது. நகராட்சியைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 100 வாா்டுகளை வென்றுள்ளது.

அதேபோல மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளில், 30 பேரூராட்சிகளை திமுக ஒட்டுமொத்தமாக வென்றது. வனவாசி ஒரு பேரூராட்சியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. பேரூராட்சிகளில் உள்ள 474 இடங்களில் திமுக-278, அதிமுக-103, சுயேச்சைகள்-54, பாமக-15, காங்கிரஸ்-13, இந்திய கம்யூனிஸ்ட்-4, பாஜக-3, விடுதலை சிறுத்தைகள்-3, தேமுதிக-1 என வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சிகளில் திமுக கூட்டணி 298 இடங்களை வென்றுள்ளது.சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 699 இடங்களில் திமுக தனித்து 421 இடங்களில் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக அதிமுக 144 வாா்டுகளிலும், பாமக -27, தேமுதிக-1, பாஜக-3, காங்கிரஸ்-19, இந்திய கம்யூனிஸ்ட்-4, விடுதலை சிறுத்தைகள்-4, சுயேச்சைகள் 76 வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனா். இதில், திமுக கூட்டணி மொத்தமாக 448 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT