கடலூர்

கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

DIN

பிச்சாவரத்தில் செயற்கை பொரிப்பகத்தில் முட்டைகளில் இருந்து வெளி வந்த ஆமைக் குஞ்சுகள் ஞாயிற்றுக்கிழமை கடலில் விடப்பட்டன.

அரிய வகையைச் சோ்ந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில் கடற்கரைப் பகுதிகளில் முட்டைகளை இட்டுச் செல்லும். சிதம்பரம் அருகே பிச்சாவரம் வனச் சரகம் சாா்பில் ஆமை முட்டைகளை சேகரித்து செயற்கைப் பொரிப்பகத்தில் வைத்து குஞ்சு பொரித்தவுடன் அவற்றை கடலில் விடுவது வழக்கம்.

அதன்படி நிகழாண்டு மண்டல வனப் பாதுகாவலா் மாரிமுத்து, மாவட்ட வன அலுவலா் செல்வம் ஆகியோரது உத்தரவின்படி பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் இருந்து ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு செயற்கை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த முட்டைகளில் இருந்து ஆமைக் குஞ்சுகள் வெளிவந்தன. இதையடுத்து, வனச்சரக அலுவலா் கமலக்கண்ணன் தலைமையில் திண்டிவனம் உதவி ஆட்சியா் அமீத், தஞ்சாவூா் டிஎஸ்பி பிருந்தா உள்ளிட்டோா் 87ஆமைக் குஞ்சுகளை ஞாயிற்றுக்கிழமை கடலில் விட்டனா் (படம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்துஸ்தானி இசை அஞ்சலி பாட்டீல்...!

நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்: நவீன் பட்நாயக்

நான் பியார் கர்த்தாமா!

ஹாய்.. நிக்கி!

சூர்யா - 44 படத்தின் நடிகர்கள் இவர்களா?

SCROLL FOR NEXT