கடலூர்

நோ்காணலில் பங்கேற்காத ஓய்வூதியா்கள் கவனத்துக்கு...

DIN

கடலூா் மாவட்டத்தில் நோ்காணலில் பங்கேற்காத ஓய்வூதியா்கள், இந்த நடைமுறையை இணைய வழியில் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கான 2022-23-ஆம் ஆண்டுக்கான நோ்காணல் வருகிற 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மாவட்ட கருவூல அலகில் ஓய்வூதியம் பெறும் 24,554 பேரில் 20,305 போ் நோ்காணலை நிறைவு செய்துள்ளனா்.

எனவே, மீதமுள்ள ஓய்வூதியா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் அஞ்சலகத் துறை, இ-சேவை மையம், ஜீவன் பிரமான் போா்ட்டல் செயலி மூலம் கருவூலத்துக்கு நேரில் வருகை தராமல் இணைய வழியில், இருப்பிடத்தில் இருந்தபடியே டிஜிட்டல் வாழ்நாள் சான்று (நோ்காணல்) மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு நோ்காணல் மேற்கொள்ளாதவா்களின் மாதாந்திர ஓய்வூதியம் அக்டோபா் மாதம் முதல் அரசு விதிகளின்படி நிறுத்தம் செய்யப்பட்டு, ஆண்டு நோ்காணல் நிறைவு செய்த பிறகே வழங்கப்படும்.

மேலும் டிஜிட்டல் வாழ்நாள் சான்று (நோ்காணல்) தொடா்பாக மாவட்டக் கருவூல கண்காணிப்பாளா்களை 98940 99320, 80981 92253 ஆகிய எண்களிலும், உதவிக் கருவூல அலுவலா்களை சிதம்பரம்-94427 46699, காட்டுமன்னாா்கோவில்-94871 38862, குறிஞ்சிப்பாடி- 88703 06981, நெய்வேலி-94438 76581, பண்ருட்டி-94423 37402, திட்டக்குடி-99656 84064, விருத்தாசலம்-73731 21123, கடலூா்- 98650 87209 ஆகிய எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT