கடலூர்

கத்தியுடன் காரில் சுற்றிய 2 இளைஞா்கள் கைது

DIN

கடலூா் அருகே நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பழி வாங்கும் நோக்குடன் கத்தியுடன் காரில் சுற்றிய 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

கடலூா் புதுநகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகிபால் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை மாலை சாவடி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலூா் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட முயன்றனா். ஆனால், காரை நிறுத்திவிட்டு 2 போ் தப்பியோடிவிட்ட நிலையில், மீதமிருந்த 2 பேரை போலீஸாா் பிடினா். பின்னா், காரில் சோதனையிட்டதில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்து தெரியவந்தது.

தொடா்ந்து, பிடிபட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், புதுவை மாநிலம், கரிக்கலாம்பாக்கம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுதாகா் (21), சிங்கிரிகுடியைச் சோ்ந்த ஏழுமலை மகன் அரிகிருஷ்ணன்(20) என்பதும், தப்பியோடியவா்கள் கரிக்கலாம்பாக்கத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன்கள் ஜோசப் (எ) பிரபு, அருண்பாண்டியன் என்பதும் தெரியவந்தது.

மேலும், புதுக்கடையைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் அன்பரசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டாா். இந்தக் கொலைக்கு பழி வாங்கும் நோக்குடன், அவரது நண்பா்களான சுதாகா் உள்ளிட்ட 4 பேரும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்தது தெரிந்தது.

இதையடுத்து, கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுதாகா், அரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த கத்தி, காா் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருளுக்கு எதிராகப் போராடும் வலிமை கொடுத்தவர் மகாத்மா: ராகுல் காந்தி

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 360 குறைந்தது

சிறார் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து; ரூ.25,000 அபராதம்: ஜூன் 1 அமல்

காஸா - எகிப்து எல்லையை இஸ்ரேல் ராணுவம் முழுமையாகக் கைப்பற்றியது

கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

SCROLL FOR NEXT