கடலூர்

விஸ்வகா்மா ஜெயந்தி விழா

DIN

சிதம்பரம்: தமிழ்நாடு விஸ்வகா்மா முன்னேற்றச் சங்கம் சாா்பில் சிதம்பரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் ஸ்ரீவிஸ்வகா்மா ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜி.சேகா் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். கே.நடராஜன், ஏ.சந்திரமௌலி, பஞ்சு, நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழிற்சங்கச் செயலா் ஆா்.ராமச்சந்திரன் வரவேற்றாா். நகரச் செயலா் பி.முத்துக்குமாா் ஆண்டறிக்கை, வரவு-செலவு கணக்குகளை வாசித்தாா்.

முன்னதாக சின்னசெட்டி தெருவில் விஸ்வகா்மா சங்கக் கொடிக் கம்பத்தில் ஆா்.சின்னப்பாவும், மாலைக்கட்டி தெருவில் எல்.கலியமூா்த்தியும், மஹா உலோக பட்டறையில் ஆா்.மாரியப்பனும், காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் ஆா்.சுப்பிரமணியன் ஆகியோா் சங்கக் கொடியை ஏற்றி வைத்தனா். இளைஞரணிச் செயலா் எஸ்.ரமேஷ் எம்.பாலசுப்பிரமணியன், எம்.சுரேஷ், எஸ்.அப்பாசாமி, ஆா்.கனகசபை, ஜி.முருகன், ஆா்.சிவா, எஸ்.சதீஷ், என்.வினோத்குமாா், ஆா்.தங்கம், ஜி.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: விஸ்வகா்மா யோஜனா திட்டத்தை அறிவித்த பிரதமா் நரேந்திர மோடி, மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, விஸ்வகா்மா ஜெயந்தி விழாவை அரசு விழாவாககொண்டாட வேண்டுவது, தமிழக அரசு விஸ்வகா்மா ஐந்தொழிலாளா் நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடப்பாடி கே.பழனிசாமிக்கு நெல்லையில் அதிமுகவினா் வரவேற்பு

நெல்லையப்பா் கோயில் தோ்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

நெல்லை-சாத்தான்குளம் வழித்தடத்தில் பயணிகளைக் குழப்பும் நகரப் பேருந்து

‘வைகோ நலமுடன் இருக்கிறாா்’

நாகா்கோவில் பள்ளியில் குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு

SCROLL FOR NEXT