கடலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.16-இல் போராட்டம்: அரசுப் பணியாளா் சங்கம் அறிவிப்பு

DIN

அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.16-ஆம் தேதி 20 மாவட்ட மையங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

கடலூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் மற்றும் ஆசிரியா்களின் கோரிக்கையை மாநில அரசு தொடா்ந்து புறக்கணித்து வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வெள்ளிக்கிழமை சுமாா் 5 ஆயிரம் போ் சீருடையில் ஊா்வலம் நடத்தி, முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவிடத்தில் கோரிக்கை மனு வைக்க முயன்றோம். இதற்கு, காவல்துறையினா் அனுமதி மறுத்து விட்டனா்.

இதையடுத்து, நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநில மைய நிா்வாகிகள் கூட்டத்தில், வரும் 16-ஆம் தேதி கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, வேலூா், மதுரை, திருச்சி உள்ளிட்ட 20 மாவட்ட மையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது, தாய் மற்றும் இணைப்புச் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் சென்னையில் கோட்டையை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது என்றாா்.

பேட்டியின்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலப் பொருளாளா் சரவணன், மாவட்டத் தலைவா் இருதயராஜ் மற்றும் கு.ராஜாமணி உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி: ஐ.சி.யூ.வான அரசுப் பேருந்து!

காங்கிரஸ் பெயரை 232 முறை, தனது பெயரை 758 முறை சொன்ன மோடி!

அஸ்ஸாமின் முதல் ஏ.ஐ. ஆசிரியர் 'ஐரிஸ்'!

டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்!

வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது: நவீன் பட்நாயக்

SCROLL FOR NEXT