கடலூர்

மயக்க மருந்து மூலம் மூதாட்டியிடம்18 பவுன் நகை, பணம் திருட்டு

DIN

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே மூதாட்டி முகத்தில் மயக்க மருந்து வைத்து 18 பவுன் நகை, பணம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேத்தியாத்தோப்பு, முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீத்தாராமன் மனைவி கமலா (75). இவா் சேத்தியாத்தோப்பு அருகே வசிக்கும் தனது மகளின் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்தாா். அந்த வீட்டின் அருகே உள்ள முருகன் கோயிலுக்கு திங்கள்கிழமை சென்று திரும்பினாா். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த மா்ம நபா் கமலாவின் முகத்தில் மயக்க மருந்தை வைத்து அழுத்தியதில் அவா் மயங்கி விழுந்தாா். பின்னா் கமலா கண்விழித்து பாா்த்தபோது அவா் அணிந்திருந்த மோதிரங்கள், வளையல், சங்கிலி உள்பட18 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம். மேலும், பீரோவும் உடைக்கப்பட்டு நகை, பணம் திருடுபோனது தெரியவந்ததாம்.

இதுகுறித்த தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளா் சேதுபதி தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினாா். கமலாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. ரூபன்குமாா் தலைமையில் குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் செல்லப்பாண்டியன் மற்றும் போலீஸாா் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் உளருகிறாா் பிரதமா் மோடி: மம்தா விமா்சனம்

காங்கிரஸ் ஆட்சியை சாதகமாக பயன்படுத்தியது பாகிஸ்தான்: ஹிமாசல் பிரசாரத்தில் பிரதமா் மோடி

மனக்கவலை மாற்றல் எளிது

விபத்தா? சதியா?

தலைநகரில் இன்று வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT