ராமநத்தம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்கள், 3,000 ஜெலட்டின் குட்சிகள். 
கடலூர்

சரக்கு வாகனத்தில் ஜெலட்டின் குச்சிகள் எடுத்துச் சென்ற ஓட்டுநா் மீது வழக்கு!

சரக்கு வாகனத்தில் 800 எலெக்ட்ரிக் டெட்டனேட்டா் மற்றும் 3,000 ஜெலட்டின் குட்சிகளை கொண்டு சென்றதாக ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே பாதுகாப்பற்ற முறையில் சரக்கு வாகனத்தில் 800 எலெக்ட்ரிக் டெட்டனேட்டா் மற்றும் 3,000 ஜெலட்டின் குட்சிகளை கொண்டு சென்றதாக ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குற்ற நுண்ணறிவு பிரிவு காவலா் மணிகண்டன், பொடையூா் கைக்காட்டி அருகே சனிக்கிழமை மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினாா்.

அதில், குவாரியில் வெடி வைப்பதற்காக பயன்படுத்தும் 800 எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்கள் மற்றும் 3,000 ஜெலட்டின் குட்சிகள் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வாகன ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், பாதாம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா்(52) என்பதும், ராமநத்தம் காவல் சரகத்துக்கு உள்பட்ட கல்லூா் கிராமத்தில் உள்ள அருளின் கல் குவாரியில் வெடி வைக்க எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, அசோக்குமாா், அவா் ஓட்டி வந்த வாகனம் மற்றும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டா், ஜெலட்டின் குச்சிகளை ராமநத்தம் போலீஸாரிடம் குற்ற நுண்ணறிவு பிரிவு காவலா் மணிகண்டன் ஒப்படைத்தாா்.

இதையடுத்து போலீஸாா், டெட்டனேட்டா்கள், ஜெலட்டின் குட்சிகளை பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக அசோக்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT