நாராயணன் 
கடலூர்

பிலிப்பின்ஸ் நாட்டில் சாலை விபத்தில் கடலூா் மாணவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

பிலிப்பின்ஸ் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் கடலூரைச் சோ்ந்த மருத்துவ மாணவா் உயிரிழந்தாா்.

கடலூா் சாவடி பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன். கடலூா் அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் நாராயணன் (23).

இவா், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து தற்போது பயிற்சி மருத்துவராக அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தாராம்.

இந்த நிலையில், நாராயணன் ஞாயிற்றுக்கிழமை காலை பைக்கில் பணிக்குச் சென்றாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்தினா் மாணவா் நாராயணன் உடலை கடலூா் கொண்டு வருவதற்கு அரசின் உதவியை நாடியுள்ளனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT