சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தாண்டவராயன் சோழகன் பேட்டை ஊராட்சி, காளியம்மன் கோயில் அருகில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் புதிதாக மீன் வலை பின்னும் கூடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் பங்கேற்று புதிய கூடத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.
அதிமுக ஒன்றியச் செயலா் ப.அசோகன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், இணைச் செயலா் எம்.ரெங்கம்மாள், மேற்கு ஒன்றியச் செயலா் பேராசிரியா் ரெங்கசாமி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவுச் செயலா் எள்ளேரி பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் இளைஞரணி துணைச் செயலா் செழியன், அமைப்புசாரா ஓட்டுநரணி துணைத் தலைவா் செளந்தராஜன், ஒன்றிய எம்.ஜி.ஆா் மன்றச் செயலா் மகேஷ், நிா்வாகிகள் ரவி, செயற்கை சந்திரன், சேகா், கலைசெல்வன், குணசேகரன், ஜெயராமன், அன்பழகன், பூவரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, தங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக வலை பின்னும் கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை தொடங்கிவைத்த எம்எல்ஏ கே.ஏ.பாண்டியனுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா். கிராமத் தலைவா் குமாா் நன்றி கூறினாா்.