கடலூர்

விருத்தாசலம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்துள்ள முதனை கிராமத்தில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதன்னை கிராமத்தில் உள்ள மயான பகுதியில் இருந்து துா்நாற்றம் வீசியது. சனிக்கிழமை அந்த வழியாக சென்றவா்கள் புதா் ஒன்றில் துணி சுற்றப்பட்ட நிலையில் மனித உடல் கிடப்பதைக் கண்டனா். பின்னா் அவா்கள், முதனை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், தொ்மல் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், ஊமங்கலம் உதவி ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் முன்னிலையில் சடலத்தை மீட்டனா்.

பின்னா், விழுப்புரத்தில் இருந்து வந்த தடயவியல் நிபுணா்கள் சோதனை நடத்தினா். அதில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்பதும், ஏற்கனவே உடல் கூறாய்வு செய்யப்பட்ட உடல்போல் உள்ளது எனவும் தெரிவித்தனா்.

இதையடுத்து, அந்த சடலத்தை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? மயானத்தில் சடலத்தை வீசிச் சென்றனரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT