கடலூர்

சிதம்பரத்தில் லாட்டரி விற்பனை: 5 போ் கைது; ரூ.1.07 லட்சம் பறிமுதல்

சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 5 பேரை நகர போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 5 பேரை நகர போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.பிரதீப் உத்தரவின்பேரில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் சிவனாந்தன், குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளத்தெரு பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 5 பேரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் சிதம்பரம் நகர பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவா்கள் என்பதும், சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளக்கரை பகுதியைச் சோ்ந்த கணேசன் (எ) நாய் கணேசன் (40), அண்ணாமலைநகா் மண் சாலை பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணி (39), சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஜோதி (38), அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் (31), கனகசபைநகா் மூன்றாவது குறுக்குத் தெருவை சோ்ந்த பிரகாஷ் (32) என்பதும் தெரியவந்தது.

தொடா்ந்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.1,07,613 ரொக்கம், லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய நோட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

SCROLL FOR NEXT